
Author: Fanny Crosby; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15790 Lyrics: 1 போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி,
வானும் பூவும் உம் அன்பை கூறவும்,
ஏற்றி பாடி தூதர் நீர் மென் மேலும் போற்றி
ஆண்டவரின் வல்லமை சாற்றவும்,
மேய்ப்பன் போல இயேசு தம் மந்தை காப்பார்
அன்பாய் நாளும் கரத்திலேந்தியே,
சீயோன் வாழும் தூயோரும் சான்றோரும் கூடி,
போற்றி பாடி என்றும் ஆனந்தமாய்
2 போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி,
நம்மை மீட்க மரித்தார் பாடுண்டு,
கோட்டை அரண் நம் நித்ய வாழ்வின் ராஜன்
ஏற்றி போற்றி சிலுவை நாதரை,
அன்பாய் மீட்பர் தாழ்மையாய் சகித்தார்
முள்ளாம் கீரீடம் சிரசில் பாய்ந்திட,
நம்மை மீட்க வெறுத்து கைவிடப்பட்டு,
இன்றும் நம்மில் மகிமை நாதராய்.
3 போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி,
வானில் தூதர் ஓசன்னா பாடவும்,
இயேசு ராஜன் என்றென்றும் ஆள்கிறார்
பூவில் கிரீடம் சூட்டி என்றென்றும் போற்றுவோம்,
சாவே சாக மாண்டது எங்கும் சொல்வோம்
உன் கூர் எங்கே? மரணமே சொல்வாய்,
இயேசு ராஜன் என்றென்றும் வாழ்கிறார் வென்று,
இன்றும் என்றும் வல்லமை ஓங்கவே. Languages: Tamil Tune Title: [போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி]
போற்றி போற்றி இரட்சகர் இயேசுவை போற்றி